மாலத்தீவு உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரை
மரியாதை நிமித்தம் சந்தித்தார்
பெப்ரவரி 05, 2026
இலங்கைக்கான மாலத்தீவு குடியரசின் உயர்ஸ்தானிகர், அதிமேதகு Masood Imad, இன்று (பிப்ரவரி 05) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இங்கு நடந்த கலந்துரையாடலின் போது, பரஸ்பர முக்கியத்துவம் மிக்க விடயங்கள் தொடர்பாக இரு தரப்பினரும் கலந்துரையாடினர். குறிப்பாக, இலங்கை மற்றும் மாலத்தீவுக்கு இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு துறைகளில் தொடர்புகளை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கிடையிலான நெருங்கிய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தியதுடன், மாலத்தீவுடன் பாதுகாப்புத் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்த இலங்கை உறுதியாக செயல்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இச்சந்திப்பின் போது மாலைதீவு பிரதி உயர்ஸ்தானிகர் Fathimath Ghina வும் சமூகமளித்திருந்தார்.