2027ஆம் ஆண்டுக்கான புதிய திட்ட முன்மொழிவுகள் தயாரிப்பு குறித்து பாதுகாப்பு அமைச்சில் கலந்துரையாடல்

பெப்ரவரி 06, 2026

2027ஆம் ஆண்டிற்கான புதிய திட்ட முன்மொழிவுகளைத் தயாரிக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (06 பெப்ரவரி) பாதுகாப்பு அமைச்சில், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் பங்கேற்புடன் நடைபெற்றது. இந்த நிகழ்வு பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ்  மார்ஷல் சம்பத் தூயகொந்தா (Retd) அவர்களின் பங்கெடுப்புடன் நடைபெற்றது.  

இந்த நிகழ்ச்சி, தேசிய திட்டமிடல் திணைக்களத்தினால் மேட்கொள்ளப்பட்டது. 2024 ஆம் ஆண்டின் அரச நிதி முகாமைத்துவ சட்டம் எண் 44 இன் விதிமுறைகளுக்கு இணங்க, புதிய திட்ட முன்மொழிவுகளைத் தயாரித்து சமர்ப்பிப்பதற்கான நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து அதிகாரிகளை அறிவூட்டுவதே இதன் முக்கிய நோக்கமாகும். தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. K.T.I. பிரேமரத்ன தலைமையிலான அதிகாரிகள் குழுவினால் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதன் போது, பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களின் சிரேஷ்ட  அதிகாரிகளுக்கு வருடாந்த வரவு-செலவுத் திட்டம் தயாரிக்கும் செயல்முறை, பொது முதலீட்டு திட்டம் (Public Investment Programme) உருவாக்கம், தொடர்புடைய கால அட்டவணைகள், வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள் மூலம் நிதி ஒதுக்கீடு, மற்றும் திட்ட முன்மொழிவுகளை உருவாக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.