கொழும்பில் நடைபெற்ற சீன புத்தாண்டு வரவேற்பு நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கலந்து கொண்டார்
பெப்ரவரி 10, 2026பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), நேற்று (9 பெப்ரவரி) கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் நடைபெற்ற சீன புத்தாண்டு வரவேற்பு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இலங்கைக்கான சீனத் தூதுவர், கௌரவ Qi Zhenhong அதிதிகளை வரவேற்றார். இந்நிகழ்வில் பல கலாச்சார அங்கங்களும் இடம்பெற்றன.
முன்னாள் ஜனாதிபதி, சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு ராஜதந்திரிகள், முப்படைத் தளபதிகள், சீன தூதரக அதிகாரிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வு, இலங்கை மற்றும் சீனாவுக்கிடையிலான நீடித்த நட்புறவையும் வலுவான ஒத்துழைப்பையும் பிரதிபலிப்பதாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.