பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் 2026 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் நடைபெற்றது

பெப்ரவரி 10, 2026

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் (SVU) வருடாந்திர பொதுக் கூட்டம் (AGM) இன்று (பெப்ரவரி 10) பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டம், சேவை வனிதா பிரிவின் தலைவர் Dr. (திருமதி) ருவினி ரசிகா பெரேராவின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது உரையாற்றிய அவர் சேவை வனிதா பிரிவின் நடவடிக்கைகள், முக்கிய சாதனைகள், தற்போதைய நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை தொடர்பில் எடுத்துரைத்தார். 

பாதுகாப்பு செயலாளர், எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவும் (ஓய்வு) இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.