பாதுகாப்பு அமைச்சின் காலாண்டு அடிப்படையிலான ஒருங்கிணைந்த முன்னேற்ற மதிப்பாய்வுக் கூட்டம் பாதுகாப்புச் செயலாளர் இணைத் தலைமையில் நடைபெற்றது

பெப்ரவரி 13, 2026

பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவின் (ஓய்வு), இணை தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் 2025 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டு அடிப்படையிலான ஒருங்கிணைந்த முன்னேற்ற மதிப்பாய்வுக் கூட்டம் இன்று (பெப்ரவரி 13) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு நிதி அமைச்சின் திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. எஸ். ஹேமந்த குமாரவும் இணை தலைமை வகித்தார்.

நிதி அமைச்சின் கீழ் செயல்படும் திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களம், அனைத்து பொதுத்துறை மேம்பாட்டு முயற்சிகளையும் கண்காணிக்கவும், மதிப்பீடு செய்யவும், எளிதாக்கவும் கடமைப்பட்டுள்ளது, அதே வேலை செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு சிறந்த முடிவுகளை சரியான நேரத்தில் அடைவதை உறுதி செய்யவும் வழிகாட்டுகிறது.

இந்தப் பின்னணியில், பாதுகாப்பு அமைச்சின் கீழ் நடைபெற்று வரும் திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும், தேசிய முன்னுரிமைகள் மற்றும் பரந்த மூலோபாய நோக்கங்களுடன் சீரமைப்பதை உறுதி செய்வதற்கும் இந்த மறுஆய்வுக் கூட்டம் ஒரு முக்கிய தளத்தை வழங்கியது.

இந்தக் கூட்டத்தில், தலைமை நிதி அதிகாரி (P & P) மற்றும் மேலதிக செயலாளர் (PS), இலங்கை கடற்படை பிரதம அதிகாரி, பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், ஜனாதிபதி செயலகத்தின் பிரதிநிதி மற்றும் முப்படைகளின் திட்டகள் மேற்பார்வை தொடர்புடைய சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன் போது செயல்திறன் மதிப்பீடு, சவால்களை அடையாளம் காணுதல் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கான செயல்படுத்தல் வழிமுறைகளை ஒழுங்குபடுத்துதல் குறித்து பங்கேற்பாளர்கள் ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு அமைச்சுக்கும் நிதி அமைச்சசுக்கும் இடையிலான உறுதியான ஒருங்கிணைப்பின் மூலம், இக்காலாண்டு மதிப்பாய்வு செயல்முறை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் சரியான நேரத்தில் திட்ட விநியோக செயட்பாட்டை ஊக்குவிக்கிறது, இது நிலையான வளர்ச்சி மற்றும் தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.