மாலத்தீவு தூதரக “Maahefun” வரவேற்பு விழாவில் பாதுகாப்புச்
செயலாளர் பங்கேற்பு

பெப்ரவரி 16, 2026

பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் தூயகொந்தா, இலங்கைக்கான மாலத்தீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் அதிமேதகு மசூத் இமாத் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு “Maahefun” வரவேற்பு விழாவில் இன்று (16 பெப்ரவரி) பங்கேற்றார்.

புனித ரமழான் மாதம் தொடங்குவதற்கு முன் பாரம்பரியமாக ஏற்பாடு செய்யப்படும் மாலத்தீவு விருந்துபசார நிகழ்ச்சியான இது, இன்று மாலை கொழும்பிலுள்ள மாலத்தீவு உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது .

இந்நிகழ்வில் அமைச்சர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு ராஜதந்திரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.