நெதர்லாந்து தூதுவர் பாதுகாப்பு செயலாளரை மரியாதை நிமித்தம் சந்தித்தார்

பெப்ரவரி 17, 2026

இலங்கைக்கான நெதர்லாந்து இராச்சியத்தின் தூதுவர், H. E. Wiebe De Boer, இன்று (17 பெப்ரவரி) பாதுகாப்பு அமைச்சில், பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

பாதுகாப்பு செயலாளர் நெதர்லாந்து தூதுவரை அன்புடன் வரவேற்று அவருடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன் போது, இரு தரப்பினரும் பரஸ்பர நலன்களைக் கொண்ட விடயங்கள் குறித்து கருத்துப் பரிமாறிக் கொண்டதுடன், இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்தனர். 

அத்துடன் இது தொடர்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தங்களது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினர். மேலும் எதிர்வரும் காலங்களில் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மைகள் தொடர்பிலும் நம்பிக்கை  வெளியிட்டனர்.

இந்தக் கலந்துரையாடலில் இலங்கைக்கான நெதர்லாந்து இராச்சியத்தின் துணைத் தூதுவர் Iwan Rutjens பங்கேற்றார்.