பொது தினத்தில் முன்னாள் படை வீரர்களின் நலனில் பாதுகாப்பு அமைச்சின்
உறுதிப்பாடு மீண்டும் வலியுறுத்தபட்டது
பெப்ரவரி 18, 2026
பாதுகாப்பு அமைச்சில், இன்று (பெப்ரவரி 18) நடைபெற்ற பொது தின நிகழ்ச்சியின் போது, முன்னாள் படை வீரர்களின் நலனை உறுதிப்படுத்துவதற்கான பாதுகாப்பு அமைச்சின் உறுதியான அர்ப்பணிப்பு மீண்டும் வலியுறுத்தபட்டது. பொது தின நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவின் (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வு, முன்னாள் படை வீரர்கள் மற்றும் மறைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கும் தங்களது குறைகளை நேரடியாக முன்வைத்து தீர்வு காணும் முக்கிய வாய்ப்பாக அமைகிறது.
பாதுகாப்பு இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுடன் நேரடியாக கலந்துரையாடி, நிலுவையில் உள்ள நிர்வாகச் செயல்முறைகளை விரைவுபடுத்த அமைச்சு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், மறைந்த போர்வீரர்களின் குடும்பங்களுக்கான நலத்திட்டங்களை விரைவாக அமுல்படுத்தவும், முன்னாள் போர்வீரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் உயர்த்த நடவடிக்கைகள் எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.
இந்த நடவடிக்கைகள் வெறும் நிர்வாகப் பொறுப்புகள் மட்டுமல்ல; நாட்டின் இறையாண்மைக்காக உயர்ந்த தியாகம் செய்தவர்களை கௌரவிக்கும் பொறுப்பாகும் என பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டார்.
இந்த பொது தின நிகழ்ச்சிகள், முன்னாள் போர்வீரர்களின் சேவையையும் தியாகமும் மதிப்பிடப்படுவதற்காக நேரடி, வெளிப்படையான மற்றும் அர்த்தமுள்ள நடவடிக்கைகள் மூலம் செயல்படுத்தப்படும் அமைச்சின் தொடர்ச்சியான பணியின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.