நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலைக்கு பாதுகாப்பு செயலாளர்
ஆய்வுப் பயணம் மேட்கொண்டார்

பெப்ரவரி 23, 2026

அண்மையில் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் படி, மாலம்பேவிலுள்ள டர். நெவில் பெர்னாண்டோ போதானா வைத்தியசாலையின் (NFTH) நிர்வாகத்தை இலங்கை விமானப்படைக்கு (SLAF)க்கு ஒப்படைக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்து, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) இன்று (23 பெப்ரவரி) அந்நிறுவனத்திற்கு உத்தியோகபூர்வ ஆய்வுப் பயணம் மேட்கொண்டார். இதன் போது, இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவரை வரவேற்றார்.

இதன் போது, வைத்தியசாலையின் தற்போதைய நிலைமை, நீண்டகால நோக்கு, மற்றும் வளாகத்திலுள்ள மருத்துவ வசதிகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான முக்கிய குறிக்கோள்கள் தொடர்பாக சிறப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. 2026 பெப்ரவரி 9 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், NFTH இன் நிர்வாகம் தற்போது SLAF இன் மேற்பார்வையின் கீழ் செயல்படுகிறது.

SLAF சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் (Dr) லலித் ஜயவீர அவர்கள், வைத்தியசாலையின் நடப்பு முயற்சிகள், செயல்பாட்டு திறன்கள் மற்றும் உருவெடுக்கும் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்ய எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள் குறித்து விரிவான விளக்கமொன்றை வழங்கினார். மேலும், கட்டமைப்பு அபிவிருத்தி, நிதி தொடர்பான அம்சங்கள் மற்றும் திட்டத்தை காலத்திற்குள் நிறைவேற்ற அமைச்சுகங்களிடையேயான ஒருங்கிணைப்பு தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டது. 

நாட்டின் சுகாதாரத் துறையை வலுப்படுத்தும் வகையில், இவ்வைத்தியசாலையை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உயர்தர மருத்துவ மையமாக மாற்றுவதன் முக்கியத்துவத்தை பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தினார்.

இவ்வாய்வுப் பயணத்தில் SLAF இன் சிரேஷ்ட அதிகாரிகளும், பல முக்கிய அமைச்சுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.