தனியார் பாதுகாப்பு சேவைத் துறையை ஒழுங்குபடுத்த
புதிய விதிமுறைகள் அறிமுகம்

பெப்ரவரி 26, 2026

தனியார் பாதுகாப்பு சேவைத் துறையை வலுப்படுத்தும் நோக்கில், அதன் ஒழுங்குமுறைச் சட்டத்தை மேம்படுத்தும் விரிவான நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தேசிய முன்னுரிமைகளுக்கு இணங்க தொழில்முறைத் திறன், சேவைத் தரம் மற்றும் செயல்திறனை உயர்த்துவதே இந்நடவடிக்கைகளின் நோக்கமாகும். பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படும் இந்தபுதிய கட்டமைப்பின் கீழ், தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் கடுமையான பதிவு மற்றும் உரிமம் வழங்கும் நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படும். சேவைகளின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தல் அறிமுகப்படுத்தப்படுவதுடன், பொறுப்புணர்வை உறுதிசெய்ய மேம்பட்ட கண்காணிப்பும் அமல்படுத்தப்படும். மேலும், அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி தரநிலைகள், திறனறிதல் தேவைகள் மற்றும் தொழில்முறை ஒழுக்கக் கோட்பாடுகளை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
தற்போது தனியார் பாதுகாப்பு முகவர்கள் (ஒழுங்குமுறை) சட்டம் No. 45 of 1998 இன் கீழ் இயங்கும் தனியார் பாதுகாப்பு துறை, இதுவரை நடைமுறையில் இருந்த பொது பதிவு முறைமையை மாற்றி, வழங்கப்படும் சேவைகளின் தன்மைக்கு ஏற்ப நிறுவனங்களை வகைப்படுத்தும் புதிய முறையை அறிமுகப்படுத்தும். பணியாளர்கள் தங்களது பணித் தேவைகளுக்கு ஏற்ப சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுவார்கள். கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு மற்றும் தொழில்பயிற்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கப்படும் திட்டங்களின் மூலம் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்தகுதிகளைப் பெற வாய்ப்பும் வழங்கப்படும். மேலும், சீருடை விதிமுறைகள், ஒழுக்க வழிகாட்டுதல்கள் மற்றும் திறன் சான்றிதழ்கள் பெற்றுக்கொடுத்த தொழில்முறை நடத்தை உறுதிப்படுத்தும். ஊதியங்கள், தொழிலாளர்களின் ஊதியச் சபை கட்டளைச் சட்டம் மற்றும் தேசிய குறைந்தபட்ச ஊதியத் (திருத்தச்) சட்டம் No. 11 of 2025 ஆகியவற்றிற்கமைய வழங்கப்படும்.
 
தற்போது 1,050 பதிவு செய்யப்பட்ட தனியார் பாதுகாப்பு சேவை வழங்குநர்களில் சுமார் 150,000 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் சமர்ப்பித்த முன்மொழிவின் அடிப்படையில் அமைச்சரவை இந்த மறுசீரமைப்புக்கு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த புதிய நடவடிக்கைகள் இத் துறையின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தி, சேவை வழங்கலை மேம்படுத்தி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்ள, மேலும் இத் துறையை சமகால தேசிய மற்றும் சர்வதேச தரநிலைகளுக்கு அமைய செயட்பட உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.