ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற பொது தின நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற போர்வீரர்களின் பிரச்சினைகள் குறித்து பாதுகாப்பு பிரதி
அமைச்சர் கவனம் செலுத்தினார்

மார்ச் 03, 2026

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவின் (ஓய்வு) தலைமையில் மார்ச் 02 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் பொது தின நிகழ்ச்சி நடைபெற்றது.

ஓய்வு பெற்ற போர்வீரர்கள் மற்றும் போர்வீரர் குடும்பத்தினரால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளில், குறிப்பாக வீடமைப்பு, நலன்புரி மற்றும் பிற தேவைகள் தொடர்பான விடயங்கள் குறித்து முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டது. தங்களின் பிரச்சினைகளை முன்வைத்து தேவையான உதவிகளைப் பெறும் நோக்கில் ஓய்வு பெற்ற போர்வீரர்கள் மற்றும் போர்வீரர் குடும்பத்தினர்கள் பெருமளவில் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன் போது, வருகை தந்தவர்களின் பிரச்சினைகள் குறித்து அவர்களுடன் பாதுகாப்பு பிரதி அமைச்சர் தனிப்பட்ட முறையில் கதைத்து அவற்றிற்கு தீர்வுகளை வழங்குவதற்கான விடயங்கள் தொடர்பில் ஆய்வு செய்தார். அதன்படி, சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக செயல்படும் உரிய நிறுவனங்களுடன் நேரடியாக ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பொருத்தமான தீர்வுகளை விரைவுபடுத்தவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

போர்வீரர்கள் சேவையை கருத்திற்கொண்டு அவர்கள் ஆற்றிய உயரிய சேவையை வலியுறுத்திய பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஓய்வு பெற்ற போர்வீரர்களின் அந்த மகத்தான தியாகங்களை பாதுகாப்பு அமைச்சு மிகுந்த மரியாதையுடன் மதிப்பதாக தெரிவித்தார். போர்வீரர்களின் நலன், கௌரவம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது பாதுகாப்பு அமைச்சின் முதன்மை பொறுப்பாகும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.