தெற்குக் கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரான் கப்பலிருந்து உயிர் தப்பியவர்களை இலங்கை கடற்படை ஒன்றிணைந்த நடவடிக்கைக மூலம் மீட்பு
மார்ச் 04, 2026காலிக்கு தெற்குக் கடற்பரப்பில் கப்பல் ஒன்று விபத்துத்தில் சிக்கியியுள்ளதாக (Maritime Rescue Coordination Centre Colombo - MRCC) கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு புதன்கிழமை (மார்ச் 04) அதிகாலை 5.08 மணியளவில் கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பை தொடர்ந்து, இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து, தேடல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
அவசரநிலைக்குள்ளான அந்தக் கப்பல் இலங்கையின் பிராந்திய கடல் எல்லைக்கு வெளியேயிருந்தாலும், இலங்கை பொறுப்பு வகிக்கும் தேடல் மற்றும் மீட்பு பிராந்தியமான (Search and Rescue Region - SRR) பகுதியில் இருந்தது.
இதனையடுத்து MRCC கொழும்பு உடனடியாக மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கி, கடற்படை மற்றும் விமானப்படை கடல் கண்காணிப்பு விமானங்களை சம்பவ இடத்திற்குப் அனுப்புவதற்காக ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேட்கொண்டது. தேவையான மீட்பு குழுக்கள் மற்றும் உபகரணங்களுடன் கடற்படை குழுவினர் காலை சுமார் 6.00 மணியளவில் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்தனர்.
இந்த நடவடிக்கையின் போது காயமடைந்த கப்பல் பணியாளர்கள் 32 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்காக காலியில் உள்ள கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு (Teaching Hospital Karapitiya) கொண்டு செல்லப்பட்டனர்.
இதற்கிடையில் கடற்படை மற்றும் கடலோர காவற்படை விமானப்படையுடன் இணைந்து சுற்றியுள்ள கடற்பரப்பில் விரிவான தேடுதல் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. இதுவரை கப்பலின் பணியாளர்களாக நம்பப்படும் 84 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனை அதிகாரிகளிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இலங்கை, ஒரு கடல்சார் நாடாக அதன் தேடல் மற்றும் மீட்பு பிராந்தியத்தில் ஏற்படும் அவசர நிலைகளுக்கு விரைவாக பதிலளிப்பதில் உறுதியாக உள்ளது. இது International Convention on Maritime Search and Rescue மற்றும் United Nations Convention on the Law of the Sea ஆகிய சர்வதேச உடன்படிக்கைகளின் கீழ் உள்ள கடமைகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.