முன்னாள் யுத்த வீரர் குடும்பங்களின் குழந்தைகளுக்கு ரணவிரு சேவா அதிகாரசபையினால் கல்வி புலமைப்பரிசில்கள் அன்பளிப்பு
மார்ச் 06, 2026முன்னாள் யுத்த வீரர்கள், உயிர்நீத்த மற்றும் ஊனமுற்ற வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகைகள் வழங்கும் நிகழ்வு இன்று (மார்ச் 06) ரணவிரு சேவா அதிகாரசபையினால் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்துக்கொண்டனர்.
நிகழ்வின் போது, பார்வை குறைபாடு கொண்ட ஒரு மாணவருக்கு பாதுகாப்பு செயலாளர் அடையாளமாக ஒரு மடிக்கணினியை வழங்கி வைத்தார்.
உதவித்தொகை பெறுபவர்களின் உயர்கல்விக்கு தகுதி பெற்ற மாணவர்களும் அடங்குகின்றனர். இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் பொலிஸ் குடும்பங்களைச் சேர்ந்த இம்மாணவர்கள் மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம், சட்டம் மற்றும் மேலாண்மை உள்ளிட்ட 32 துறைகளில் உயர்கல்வியை தொடர்ந்து வருகின்றனர். அவர்களின் பட்டப்படிப்பு கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்ய உதவுவதற்காக நான்கு ஆண்டு காலத்திற்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
இங்கு உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர், முன்னாள் யுத்த வீரர்களின் குழந்தைகள் பெற்றுள்ள கல்விசார் சாதனைகளை பாராட்டினார். மேலும், நாட்டின் பாதுகாப்பிற்காக சேவையாற்றிய வீரர்களின் அளப்பரிய சேவை மற்றும் தியாகங்களை மதிக்கும் வகையில், அரசாங்கம் இத்தகைய நலத்திட்டங்கள் மற்றும் கல்வி ஆதரவு திட்டங்களை தொடர்ந்தும் வழங்கும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்த திட்டத்தின் கீழ், நாட்டின் பாதுகாப்பிற்காக உன்னத தியாகம் செய்த வீரர்களின் குடும்பங்களின் கல்வி முன்னேற்றத்தையும் நலனையும் மேம்படுத்தும் நோக்கில், மாதாந்த கல்வி உதவித் தொகை இவ்வாண்டு ஜனவரி (2026) மாதம் முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர் பிரிகேடியர் S.D. கொஹொன (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள், முப்படை பிரதிநிதிகள் கலந்துகொண்டுனர்.