--> -->

அமெரிக்க பசுபிக் பிராந்திய விமானப் படைத் தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

மார்ச் 04, 2021

அமெரிக்க பசுபிக் பிராந்திய விமானப் படைத் தளபதி ஜெனரல் கென்னெத் எஸ் வில்ஸ்பெச் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஒய்வு) இன்று சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் அமெரிக்க பசுபிக் பிராந்திய விமானப் படைத் தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இலங்கை விமானப்படையின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளுக்கு உத்தியோக பூர்வமாக அழைக்கப்பட்ட அமெரிக்க பசுபிக் பிராந்திய விமானப் படைத் தளபதி, தனது நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கமாகவே இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள இவர், அமெரிக்க பசுபிக் பிராந்திய விமானப் படைக்கு கட்டளையிடும் அதிகாரியாகவும், அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளையகத்தின் விமானங்கள் மற்றும் அதனோடிணைந்த விமான தளவாடங்களுக்கு கட்டளையிடும் அதிகாரியாகவும் செயற்படுகிறார்.

இதேவேளை, இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இந்த சந்திப்பில் இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரணவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.