--> -->

பங்களாதேஷ் விமானப் படைத் தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

மார்ச் 04, 2021

பங்களாதேஷ் விமானப் படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் மஸீஹுஸ்ஸமான் செர்னியபாத் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஒய்வு) வை இன்று சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பங்களாதேஷ் விமானப் படைத் தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

மேலும், இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் எயார் சீப் மார்ஷல் மஸீஹுஸ்ஸமான் செர்னியபாத் மற்றும் ஜெனரல் குணரத்னவுக்கும் இடையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இந்த சந்திப்பில் இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரணவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.