--> -->

பாடசாலை மாணவர்களுக்கு இராணுவத்தினர் உதவி

மார்ச் 25, 2021
  • பொதுமக்களுக்கான சேவை வழங்குதல்

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் சிவில் இராணுவ ஒருங்கிணைப்பு திட்டத்திற்கு அமைவாக  ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்றில் மன்னந்தல் தமிழ் ஆரம்ப பிரிவு பாடசாலையில் கல்வி கற்கும் முல்லைத்தீவை சேர்ந்த 50 மாணவர்களுக்குபாடசாலை உபகரணங்கள் அடங்கிய பரிசுப்பொதிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

இந்த பரிசுப் பொதிகளில் பயிற்சிக் கொப்பிகள், வாசிப்பு புத்தகங்கள் கற்றல் உபகரணங்கள் உள்ளிட்ட பல பாடசாலை உபகரணங்களை உள்ளடங்கியுள்ளன.

இந்த பரிசு பொதிகளை விநியோகிக்கும் நிகழ்வில் 641வது  பிரிகேட்டின் கட்டளைத் தளபதி கேர்ணல் ஜனக் ஜெயவர்தன உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்'

இதேவேளை கிளிநொச்சியை தளமாகக் கொண்டுள்ள இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றுமொரு நிகழ்வில் கிளிநொச்சியைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாடசாலைப் பயன்பாட்டுக்கு தேவையான  காகிதாதிகள் கொண்ட பொதிகள்  விநியோகிக்கப்பட்டன.

இந்த பிராந்தியத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் தேவையுடைய குடும்பங்களைச் சேர்ந்த கல்வி கற்கும் மாணவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில்  தனவந்தர்கள் பலரினால் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த கற்றல் உபகரணங்களின் விநியோக விழா, சிவில் விவகார ஒருங்கிணைப்பு மற்றும் கிளிநொச்சியில் பாதுகாப்பு படை தலைமையகத்தின் படைவீரர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது.