--> -->

கடற்படையினரால் 350 தலசீமியா நோய்க்கான சிகிச்சை கருவிகள் சுகாதார அமைச்சிடம் கையளிப்பு

ஏப்ரல் 22, 2021

இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமுதாய நல பணிகளின் ஒரு பகுதியாக தலசீமியா நோய்க்கான 350 சிகிச்சைக் கருவிகள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் சுகாதார அமைச்சிடம் கடற்படைத் தலைமையகத்தில் வைத்து நேற்று (ஏப்ரல், 21) கையளிக்கப்பட்டது.

லசீமியா இலங்கையில் மிகவும் பொதுவான மரபுவழி இரத்தக் கோளாறாகக் கருதப்படுகிறது. தலசீமியா நோயாளிகளுக்கு அடிக்கடி இரத்தமாற்றம் காரணமாக முக்கிய உறுப்புகளில் தேங்கும் அதிகப்படியான இரும்பு படிவுகளை அகற்ற இந்த சிகிச்சை கருவிகள் அவசியம் கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு 2011 ஆம் ஆண்டில் குறைந்த விலையில் தலசீமியா சிகிச்சை கருவியை தயாரிக்கத் தொடங்கியது. அனைத்து அதிகாரிகளும் கடற்படை வீரர்களும் தங்களது மாதாந்த சம்பளத்திலிருந்து இந்த உன்னத காரணத்திற்கு தானாக முன்வந்து பங்களிப்பு வழங்கிவருவதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

சந்தை விலை ரூ. 75,000 - 100,000 ஆகவுள்ள தலசீமியா சிகிச்சை கருவி, கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவினால் ரூ. 4,250 செலவில் உற்பத்தி செய்யப்படுவதுடன் அவற்றினை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்குவதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு 2011 இல் தலசீமியா சிகிச்சை கருவிகளை உற்பத்தி செய்வதற்காக அழகு சாதன சாதனப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் சான்றிதழ் எண் (டி.வி.ஆர்-பி.ஆர் -019014) பெற்றுள்ளது.

2011 முதல், இலங்கை கடற்படை 2374 தலசீமியா சிகிச்சை கருவிகளை பிரதான வைத்தியசாலைகளுக்கு ஒப்படைத்துள்ளதுடன்இந்த நோயினால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கும் ஒப்படைத்துள்ளது.

இந்த சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் (தொற்றா நோய்கள்) வைத்தியர் சம்பிக்க விக்ரமசிங்க கடற்படை செயற்திட்ட மற்றும் திட்டமிடல் பிரிவு பணிப்பாளர் கொமடோர் பிரதீப் ரத்நாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.