--> -->

போதைப்பொருள் கடத்தல் வளையம் முடக்கம் - பாதுகாப்பு செயலாளர்

ஏப்ரல் 22, 2021
  • மறுசீரமைக்கப்பட்ட புலானாய்வு சேவையின் காரணமாக எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களுக்கு இடமில்லை

நாட்டில் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு போன்ற துயர சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க புலனாய்வுத்துறையை மறுசீரமைத்துள்ளோம் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) நேற்று மாலை (ஏப்ரல், 20) தெரிவித்தார்.

"புலனாய்வு சேவைகள் நன்கு பயிற்றுவிக்கப்பட்டவையாகவும் தொழிற் தகமை கொண்டதாக அமைந்த போதிலும் திறம்பட இயங்குவதற்கான சூழல் இன்மை காரணமாக அவர்களின் செயற்பாடுகள் முடக்க நிலைக்குச் சென்றன என தெரிவித்த ஜெனரல் குணரத்ன "நாம் அந்த தவறை மீண்டும் செய்யாது எமது புலனாய்வு சேவைகள் சிறப்பாக செயல்படுவதற்கு வழிவகுத்துள்ளோம் என குறிப்பிட்டார்.

அத்தனகல்ல ராஜமஹா விகாரையில் இடம்பெற்ற
இரவு நேர பிரித் பாரயன நிகழ்வின்போது
ஊடகங்களுக்கு பதிலளிக்கும் போது பாதுகாப்பு செயலாளர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழும் அபாயம் குறித்த கேள்விக்கு மேலும் பதிலளித்த அவர், இதேபோன்ற முயற்சிகளைத் தடுக்க நாங்கள் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம், சமூகத்திற்குள் இதுபோன்ற தீங்கு விளைவிக்கும் போதனைகளைத் தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

இதேவேளை, பல்வேறு போதைப்பொருள் கடத்தல் முயற்சிகளை முறியடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளித்த அவர், “பாதுகாப்பு மிக்க பூச சிறைச்சாலையில் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடும் பிரதான நபர்களை கண்காணிப்பின் கீழ் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டமையினால் அவர்களின் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் முயற்சிகள் பெருமளவில் முடங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த அவர், அண்டை நாடுகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள விசேட பொறிமுறையின் மூலம் போதைப் பொருள் கடத்தல் காரர்களின் துணை அமைப்பும் செயற்பட முடியாது உள்ளதாக தெரிவித்தார்.

எனவே, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மீது முப்படைகள், பொலிஸ், உளவுத்துறை சேவைகள் மற்றும் அண்டை நாடுகளின் ஒத்துழைப்புடன் அவர்களை சுற்றி ஒரு பெரிய அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

இது ஒரு நீண்ட செயல்முறை என்பதால் குறுகிய காலத்தில் முடிவுகள் குறிப்பிடத்தக்கவையாக அமையாத போதிலும் எதிர்காலத்தில் வெற்றியை எங்களால் காண முடியும் என்று பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.