--> -->

நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 96,478 ஆக அதிகரிப்பு

மே 02, 2021

இன்று மே 02ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 1716 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 109,861ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் வெளிநாட்டிலிருந்து வரகை தந்த எழுபது பேரும் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 375 பேரும், கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த 247 பேரும், களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 158 பேரும், ஏனைய மாவட்டங்களை சேர்ந்த 919 பேரும் அடங்குவதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96,458 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, அவர்களில் 94,516 பேர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 503 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 96,478 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 12,696 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் படையினரால் மேற்பார்வை செய்யப்படும் 113 தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார் 11,212 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒன்பது பேர் உயிரிழந்ததை அடுத்து வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 687 ஆக உயர்வடைந்துள்ளது.