--> -->

ரூ.55 மிலியன் பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

மே 04, 2021

யாழ்ப்பாணம், வட காங்கேசன்துறை கடற்பரப்பில் கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படை இணைந்து நடாத்திய விஷேட தேடுதல் நடவடிக்கையின் போது 183 கிலோகிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.

வட காங்கேசன்துறை கடற்பரப்பில் சுமார் 08 கடல் மைல் தொலைவில் கடத்தல்காரர்களால் 58 பொதிகளில் பொதிசெய்யப்பட்டு 04 பைகளில் அடைக்கப்ட்டு நாட்டுக்குள் கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாகவும் அதன் சந்தைப் பெறுமதி சுமார் 55 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என நம்பப்படுவதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட கஞ்சா அழிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டதாகவும் கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.