--> -->

கடற்படையினரால் கொவிட்-19 க்கான இடைநிலை பராமரிப்பு மையங்களை அமைப்பு

மே 05, 2021

கொவிட்-19 தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இலங்கை கடற்படை நேற்று (மே 04) காலியில் உள்ள பூச கடற்படைத் தளத்தில் கோவிட் -19 க்கான இடைநிலை பராமரிப்பு மையத்தை நிறுவியது.

12 வார்டுகளில் கொவிட் நோயாளிகளை பராமரிக்கும் வகையில் 02 மருத்துவர்கள் மற்றும் 162 படுக்கைகள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்கள் அடங்கலாகபராமரிப்பு மையம் வசதி செய்யப்பட்டுள்ளது.

கொவிட்-19 க்கு சிகிச்சையளிக்க தேவையான வசதிகளை விரிவுபடுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உந்துசக்தியளிக்கும் வகையில், கம்பாஹாவின் வெரெல்லவத்தை பகுதியில் மூடிய தொழிற்சாலை ஒன்றை கொவிட்-19 க்கான உடனடி பராமரிப்பு மையமாக கடற்படை மே 02 அன்று மாற்றியமைத்தது.

இந்த சிகிச்சை மையத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை கருத்திற்கொண்டு 2000 படுக்கைகள் வரை வசதிகள் கொண்ட ஒரு மையமாக உருவாக்கப்படும் என கடற்படை தெரிவித்துள்ளது.