--> -->

கொடிகாமம் பொது இடங்கள் இராணுவத்தினர் தொற்று நீக்கம்

மே 08, 2021

கொடிகாமம் நகர சுற்றுப்பகுதிகள் பொதுமக்கள் பயன்படுத்தும் பொது இடங்களை தொற்று நீக்கம் செய்யவும் பணிகளை யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 52ஆவது பிரிவு படைவீரர்கள் முன்னெடுத்தனர்.

இதற்கமைய மக்கள் ஒன்று கூடும் இடங்களான  பஸ் நிலையம், ரயில் நிலையம், பொது நல மையங்கள், அரச மற்றும் தனியார் வங்கிகள், சந்தைகள் மற்றும் பொதுவாக நெரிசலான பிற இடங்கள் உள்ளிட்ட பொது இடங்கள் இத்திட்டத்தின் கீழ் தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகள் அனைத்தும்  சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.