--> -->

இலங்கை இராணுவத்தின் ஐக்கிய நாட்டு சமாதான பணிகளுக்கான விரிவாக்கமும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அனுமதியும்

மார்ச் 28, 2019

இலங்கை இராணுவமானது ஐக்கிய நாடு சபைகளின் அமைதிகாக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக தமது பாரிய சேவையினை உலக சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிமித்தம் வழங்கியுள்ளது. இலங்கை இராணுவம் ஐக்கிய நாட்டு சபையில் முதல் தடவையாக 1957 ஆம் ஆண்டுபாரம்பரிய சமாதானப் பணியுடன் ஆரம்பமாகி முதலாவதாக ஐக்கிய நாட்டு அவசர படையணி, சூஷ் போருடன் நிறைவுற்றது.பின்னர் 1960 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினர் கொங்கோவில் (MONUC) தங்களது சேவைகளை மேற்கொண்டனர்.

சில தசாப்தங்களுக்கு பின்னர் உள்நாட்டு எழுச்சி நிமித்தம் இலங்கை இராணுவத்தினர் தமது சேவையினை 2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரை ஐக்கிய நாட்டு சபைகளின் அமைதிகாக்கும் பணிகளில் இராணுவ காலாட் படையணியினரது சேவையுடன் இந்த மீள் பணிகள் (மினுஷ்டா) ஹைட்டி நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது.

தற்போதைய சூழ் நிலையில் இராணுவம் ஐக்கிய நாட்டு அமைதிகாக்கும் பணிகளின் நிமித்தம் ஜக்கிய நாட்டு சபை தலைமையகத்தில் பதவிநிலை உத்தியோகத்தர்கள் 6 கிளைகளில் விரிவாக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவ சமாதான பணிகளின் நிமித்தம் 400 க்கு அதிகமான படையினரை லெபனான், தென்சூடான் மற்றும் மாலி போன்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டு மேலும் 35 இராணுவ அதிகாரிகள் பதவி நிலை உத்தியோகத்தர்களாகவும், கண்காணிப்பு அதிகாரிகளாகவும் ஐக்கிய நாட்டு சபை தலைமையகத்தில் பணி புரிகின்றனர்.

இந்த பணிகளுக்கான தேர்வுகளுக்கு மேலதிகமாக சமாதான பணிகளில் பணி புரியும் படையினர்கள் நீல வர்ண தலைக்கவசங்கள் அணிந்துகொண்டு கடமை புரிவது கட்டாயமான விடயமாகும். அத்துடன் இது அனைத்து நாடுகளுக்குமான ஐக்கிய நாடுகள் சபையின் பொது விதிமுறைகளாகும். இலங்கை இராணுவம் சமாதான பணிகளை சிறந்த அமைதிகாக்கும் படையினரை வழங்கி அர்ப்பணிப்புடன் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றனர்.

அமைதி காக்கும் சமாதான பணிகளின் நிமித்தம் 18,600 க்கும் அதிகமான படையினர் ஈடுபட்டுள்ளதுடன் அவர்களின் சிலர் தங்களது பாரிய சேவைகளை உலக நாடுகளின் சமாதானத்திற்காக வழங்கியுள்ளனர்.

அமைதி காக்கும் பணிகளின் நிமித்தம் இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸார் இந்த கடமைகளுக்கு செல்வதற்கான அனுமதியினை பெற்றுக் கொள்வதற்கு இலங்கை மனித உரிமை ஆனைக்குழுவானது தமது உதவியினை வழங்கியுள்ளது.

இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவானது இந்த சமாதான பணிகளின் நிமித்தம் சிறந்த நல்லுறவை வளர்த்து இருதரப்பு புரிந்துணர்வை மேம்படுத்தி சிரமங்களுக்கு மத்தியில் பாரிய சேவைகளை ஆற்றி வருகின்றது.

ஐக்கிய நாடு சபையானது இலங்கை மனித உரிமை ஆனைக்குழுவை மனித உரிமை செயற்பாடுகளை செயல்படுத்துவதற்காக உள்நாட்டு பொறிமுறைகளை கையாள்வதற்குமாக தேர்ந்தெடுத்ததை முன்னிட்டு இலங்கையர்களான நாம் பெருமையடைய வேண்டும், எனும் கருத்தை இலங்கை இராணுவம் முன்வைக்கின்றது.அத்துடன் முப்படையினர் மற்றும் பொலிஸார் இந்த பணிகளின் நிமித்தம் அனுப்புவதற்கான விண்ணப்ப படிவங்களை தேர்ந்தெடுக்கும் செயற்பாடுகளை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சிரமங்களுக்கு மத்தியில் மேற்கொண்டு தமது பாரிய சேவைகளை ஆற்றி வருகின்றது.

இலங்கை மனித உரிமை ஆனைக்குழுவின் துரித செயற்பாடுகளை முன்னிட்டு இலங்கை இராணுவமானது தனது முழு நம்பிக்கையையும் இலங்கை மனித உரிமை ஆனைக்குழுவின் மேல் கொண்டுள்ளது. இலங்கை இராணுவத்திற்கு பங்கம் விளைவிக்காத நோக்கத்துடன் ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் பணிகள் நிமித்தம் ஏதாவது மேலதிக தகவல் தேவைப்படுமாயின் அங்கிகாரமற்ற நபர்களை தொடர்பு கொள்ளாமல் இராணுவ தளபதி மற்றும் இராணுவ ஊடக பணிப்பாளர் அவர்களை தொடர்பு கொண்டு ஊடாக செய்திகளை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை பிரஜைகள் பாரிய நாட்டு பற்றையும் தாய் நாட்டிற்கான தமக்கு இயலுமான சேவைகளை புரிந்து கொண்டு வருகின்றனர் என்பதில் இலங்கை இராணுவத்திற்கு எந்த வித சந்தேகமும் இல்லை.(முடிவு)

நன்றி: www.army.lk