--> -->

14 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

மே 31, 2021

பருத்தித்துறை கோட்டை பிரதேசத்தில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட இரவு நேர விசேட ரோந்து நடவடிக்கையின் போது 48.9 கிலோகிரம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இதற்கமைய வடக்கு கடற் படை கட்டடத்தில் உள்ள படைவீரர்களினால் கடற்கரையில் சந்தேகத்துக்கிடமான படகு ஒன்று போதனை இடைப்பட்ட போது பொலித்தீன் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதன்போது குறித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கடற் படையினரால்  கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சாவினை சந்தைப் பெறுமதி சுமார் 14 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் எனவும் கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கு பருத்தித்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை நடவடிக்கைகள் அனைத்தும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய  முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.

Tamil