--> -->

இலங்கை விமானப்படைக்கு தேசிய உற்பத்தித்திறன்

மார்ச் 27, 2019

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் விழாவில் தேசிய உற்பத்தித்திறன் பொதுத்துறை – திணைக்களங்களுக்கு இடையிலான வகுதிதியில் இலங்கை விமானப்படை தங்க விருதினை சுவீகரித்துள்ளது.

பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் கீழ் நிறுவப்பட்டுள்ள தேசிய உற்பத்தித்திறன்களுக்கான செயலகத்தினால் தேசிய உற்பத்தித்திறன்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. இச் செயலகத்தினால் முன்னைய வருடம் முழுவதும் உற்பத்தித்திறன்களுக்கான எண்ணக்கருக்களை அனுசரித்து சிறந்த நடைமுறைகளைப் பேணிவரும் நிறுவனங்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.

இதற்கமைவாக, இலங்கை விமானப்படை தலைமையகம், பயிற்சி பணிப்பகம் மற்றும் விமானப்படை தலைமையகத்தின் மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பணிப்பகம், கனிஷ்ட கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரி மற்றும் சீனக்குடாவில் உள்ள ஆரம்ப பறப்பு பயிற்சி அலகு, ஹிந்குராக்கொடை விமானப்படைத் தளம், 7வது ஹெலிகாப்டர் படைப்பிரிவு ஆகியன உற்பத்தித்திறன் எண்ணக்கருவின் பயன்பாடு தொடர்பில் தேசிய உற்பத்தித்திறன்களுக்கான செயலகத்தினால் மதிப்பீடு செய்யப்பட்டன.

விழாவில் பிரதம அத்தியாக கலந்து கொண்ட பிரதமர் கௌரவ. ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜெயம்பதி அவர்களுக்கு இவ்விருது வழங்கி வைக்கப்பட்டது.