ஜெட் ஸ்கை ஒபரேட்டர் பயிற்சி வழங்கும் திட்டம் கடலோர பாதுகாப்பு படையினரால் முன்னெடுப்பு

ஜூன் 14, 2021

இலங்கை கடலோர பாதுகாப்பு படை, கடலில் உயிர்காப்பு பணியில் ஈடுபடும் தமது வீரர்களுக்கு ஜெட் ஸ்கை ஒபரேட்டர் பயிற்சி வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தது.

கடலோர பாதுகாப்பு படையின் உயிர்காப்பு பணியில் ஈடுபடும் வீரர்களின் உயிர் காப்பு திறன் மற்றும் பிரயோக செயற்பாட்டு நடவடிக்கைகள் என்பவற்றை மேம்படுத்தும் வகையில் இந்த பயிற்சித் திட்டம் கடலோர பாதுகாப்பு படையினரால் பலப்பிட்டிய பயிற்சி பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கமைய, இலங்கை கடற்படையின் ஜெட் ஸ்கை மற்றும் மோட்டார்ஸ்போர்ட் பூல் நிபுணர்கள் நடத்திய நிகழ்ச்சியில் 29 உயிர்காப்பு பணியில் ஈடுபடும் வீரர்கள் பங்கேற்றதாக கடலோர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.