--> -->

இலங்கை, ஜப்பான் கடற்படை கப்பல்கள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டன

ஜூன் 21, 2021

இரண்டு ஜப்பான் கடல்சார் தற்காப்பு படைபயிற்சி கப்பல்கள், மூன்று நாள் பயணமாக இலங்கைக்கு வருகை தந்து, இலங்கை கடற்படையுடன் இணைந்து பயிற்சி நடவடிக்களை மேற்கொண்டன.

ஜப்பான் கடல்சார் தற்காப்பு படையின் 'கஷிமா'
மற்றும் 'செடொயுகி' இலங்கை கடற்படையின் சாகர கப்பல் உடன் இணைந்து கொழும்பு துறைமுக கடலில் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

இந்த பயிற்சியில் கப்பல் பயிற்சிக்கான அமைப்பு, சூழ்ச்சிகள், தகவல் தொடர்பு பயிற்சிகள் உட்பட ஏனைய கடற்படை பயிற்சிகள் என்பன இடம்பெற்றன.

இந்த வகையான கடற்படை பயிற்சிகள் இரு நாட்டு கடற்படைகளுக்கிடையேயான பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்த வழிவகுக்கும், ஏனெனில் இது கடல்சார் நடவடிக்கைகள், பரிமாற்ற உத்திகள் மற்றும் அனுபவம் குறித்த புதிய அறிவைப் பெறுவதற்கும், புதிய சவால்களை அடையாளம் காண்பதற்கும், கூட்டுத் தீர்வுகளைக் கண்டறிவதற்கும் ஒரு வழியை திக் கொடுப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வருகை தந்த ஜப்பானிய கடற்படை கப்பல்கள் பயிற்சியின் பின் நேற்றைய தினம் நாடு திரும்பின. இதன்போது அவ்விரு கப்பல்களுக்கும் கடற்படை மரபுகளுக்கு அமைய பிரியாவிடை அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியை நடவடிக்கைகளும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் சுகாதார வழி முறைகளுக்கு அமைய இடம்பெற்றதாக கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.