--> -->

“லங்காவி சர்வதேச கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி – 2019” இல் பங்கேற்க இலங்கை கடற்படைக்கப்பல் சாகர பயணம்

மார்ச் 20, 2019

மலேசியாவின் லங்காவி தீவில் எதிர்வரும் 26ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரை நடைபெறவுள்ள “லங்காவி சர்வதேச கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி – 2017” நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கை கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக்கப்பலான சாகர செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் .19) திருகோணமலை துறைமுகத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது.

“லங்காவி சர்வதேச கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சியானது ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ஈராண்டுகளுக்கொருமுறை நடைபெறுகின்ற மிகப்பெரிய கடல்சார் கண்காட்சி வகைகளில் ஒன்றாகும். 1991 ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் பாதுகாப்பு, சிவில் மற்றும் வர்த்தக பயன்பாடுகளுக்கான கடல்சார் மற்றும் வான்வெளி துறைகளுடன் தொடர்புடைய இக்கண்காட்சி இவ்வாண்டு 15 வது தடைவையாக இடம்பெறுகின்றது.

இந் நிகழ்வில் மாநாடுகள், கப்பல் காட்சிகள், கடல்வழி ஒத்திகைகள் மற்றும் கடல்சார் சொத்துகள் காட்சிகள் ஆகியன உள்ளடங்குகின்றன. இக்கண்காட்சியின் அங்குரார்ப்பண விழாவில் மலேசிய பிரதமர் கலந்து கொள்ளவுள்ளார்.

2017இல் இடம்பெற்ற “லங்காவி சர்வதேச கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சியில் இலங்கை கடற்படையினை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை கடற்படையின் சயுர ஆழ்கடல் ரோந்துக் கப்பல் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.