--> -->

இராணுவம் வாகனங்களை பழுதுபார்ப்பதன் மூலம் நாட்டிற்கு மில்லியன் கணக்கான ரூபா சேமிப்பு

ஜூன் 30, 2021

இராணுவத்தினரால் திருத்தி அமைக்கப்பட்ட 12 லேண்ட் ரோவர் ரக வாகனங்கள் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.

இலங்கை இராணுவ மின் மற்றும் இயந்திர பொறியாளர் படைவீரர்கள், இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட இந்த செயற்பாட்டின் மூலம் அந்நிய செலாவணியின் நியாயமான பகுதியை சேமிக்க முடிந்ததாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன

தற்போது, ​​பாவனையிலிருந்து அகற்றப்பட்ட வாகனங்கள், மீளபயன்படுத்துவதற்கு முன்னர்அவைகள் பழுது பார்க்கப்பட்டு மற்றும் வர்ணம் பூசப்பட்டு இராணுவ பயன்பாட்டிற்காக மீண்டும் அறிமுகப்படுத்தப்படுத்தப்படுகின்றன. கட்டுபெத்த பிரதான வாகன திருத்தும், உடவலவ, அனுராதபுரம், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உட்பட அனைத்து மாகாணங்களிலுமுள்ள இராணுவ மின் மற்றும் இயந்திர பொறியாளர் படைவீரர்கள் பட்டறைகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தபட்டு வருவதாக இராணுவ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த நிகழ்வில் இராணுவ மின் மற்றும் இயந்திர பொறியாளர் பிரிவின் கொமன்டாண்ட் மேஜர் ஜெனரல் இந்து சமரக்கோன் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.