--> -->

சர்வதேச விளையாட்டுக்களில் கௌரவத்தை சேர்த்த இராணுவ விளையாட்டு வீரர்கள்

ஜூன் 30, 2021

அண்மையில் நடைபெற்ற ‘76 வது செஸ் மியோர் நினைவு தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகளில்’ இலங்கை இராணுவ விளையாட்டு வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தி பல்வேறு விளையாட்டுகளில் பதக்கங்களை வென்று இராணுவத்துக்கும், நாட்டுக்கும் கௌரவத்தை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

இதற்கமைய, இலங்கை இராணுவத்தின் மகளிர் படையணியைச் சேர்ந்த படை வீராங்கனை சாரங்கி சில்வா நீளம் பாய்தலில் புதிய இலங்கை சாதனையை நிலைநாட்டியுள்ளதுடன் இராணுவ மின் மற்றும் இயந்திர பொறியாளர் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் எல்ஜிஎஸ் தனஞ்ஜய நீளம் பாய்தலில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன