--> -->

சேதனப் பசளை உற்பத்தியை அதிகப்படுத்தும் நடவடிக்கையில் சிவில் பாதுகாப்புப் படை பணிப்பாளர் நாயகம்

ஜூலை 08, 2021

சிவில் பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகமாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தின் போது மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவகே (ஓய்வு), அதிமேதகு ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைவாக சேதனப் பசளை உற்பத்தியை மேலும் அதிகரிப்பதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், அவரது எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், திணைக்களத்தால் மேற்கொள்ளப்படும் விவசாய நடவடிக்கைகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் அவர், நாட்டில் ஒரு வளமான அமைப்பாக திணைக்களத்தை மாற்றுவதாக உறுதியளித்ததுடன் சிவில் பாதுகாப்பு படை வீரர்களின் நலன்புரி நடவடிக்கைகளை மேம்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

சிவில் பாதுகாப்புப் படை பணிப்பாளர் நாயகமாக அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் லமாஹேவகே (ஓய்வு) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் டொக்டர். சரத் வீரசேகரவின் (ஓய்வு) வழிகாட்டுதலுக்கமைய அவ்வமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸிடம் (ஓய்வு) இருந்து தனது நியமனக்கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

சி.எஸ்.டி.யின் டி.ஜி.யாக மேஜர் ஜெனரல் லாமஹவேஜை
ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ நியமித்தார், பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் நேற்று (7) பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் (ஓய்வு) அட்மிரல் டாக்டர் சரத் வீரசேகர (ஓய்வு).

மேஜர் ஜெனரல் லமாஹேவகே பணிப்பாளர் நாயகமாக பதவியை பொறுபேற்றதை குறிக்கும் வகையில் சிவில் பாதுகாப்புப் படை தலைமையக வளாகத்தில் மரக்கன்றினை நடுகை செய்தார்.