--> -->

சமூக பொறுப்புணர்வு திட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் பாராட்டு

ஜூலை 29, 2021

ரணவிரு சேவா  அதிகாரசபைக்கு ஒரு தொகுதி அங்கவீனமுற்றோருக்கான  உபகரணங்களை  வழங்கி வைத்தமைக்காக களனி கேபிள்ஸ் நிறுவனத்தின்  தலைமை நிர்வாக அதிகாரி  திரு. மஹிந்த சரணபாலவுக்கு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜூலை 29)  இடம்பெற்ற நிகழ்வின் போதே ஜெனரல் குணரத்ன, இந்த மகத்தான சமூக பணியினை பாராட்டும் வகையில்  வரையறுக்கப்பட்ட களனி கேபிள்ஸ் நிறுவனத்தின்  தலைமை நிர்வாக அதிகாரிக்கு இந்த பாராட்டு கடிதத்தை வழங்கினார்.

அங்கவீனமுற்ற போர் வீரர்களுக்கு வழங்கி வைப்பதற்காக ரணவிரு சேவா  அதிகாரசபையிடம் கையளிப்பதற்கான இந்த திட்டம், வரையறுக்கப்பட்ட  களனி கேபிள்ஸ் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயந்த விஜேசிங்க மற்றும் முன்னாள் ரணவிரு சேவா அதிகாரசபையின் பணிப்பாளர் பிரிகேடியர் விஜித் சுபசிங்க ஆகியோரினால் ஒருங்கிணைப்புச் செய்யப்பட்டது.

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை வம்சாவளி புரவலரான ஐவர் வான்குலன்பெர்க்கினால் வரையறுக்கப்பட்ட களனி  கேபிள்ஸ்நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் பெற்றுக் கொள்ளப்பட்டதாக பிரிகேடியர்  விஜித் சுபசிங்க தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ரணவிரு சேவா அதிகாரசபை தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர (ஓய்வு) மற்றும்  உப தலைவி திருமதி. சோனியா கோட்டேகொட ஆகியோர் கலந்து கொண்டனர்.