--> -->

யாழில் 109 கிலோகிராம் கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

ஆகஸ்ட் 02, 2021

யாழ் தொண்டமானாறு முதல் மண்முனை வரையான கரையோர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 109.15கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் இதற்கென பயன்படுத்திய படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவினை சந்தைப் பெறுமதி சுமார் 32மில்லியன் ரூபா என நம்பப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த ரோந்து நடவடிக்கையில், கடற்படை வடக்கு கட்டளையகத்தின் கீழ் உள்ள P177 மற்றும் P015 ஆகிய கரையோர ரோந்துப் படகுகள் பயன்படுத்தப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் பருத்திதுறை பகுதியில் வசிக்கும் 26தொடக்கம் 28 வயது உடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பருத்தித்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் போதைப்பொருளை கடத்தலை கட்டுப்படுத்தட பாதுகாப்பு அமைச்சினால் விடுக்கப்பட்ட பணிப்புரைக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட இந்த தேடுதல் நடவடிக்கை சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.