--> -->

விமானப்படையினரால் தயாரிக்கப்பட்ட ஒக்ஸிஜன் தெரபி உபகரணங்கள் சுகாதார அதிகாரிகளிடம் கையளிப்பு

ஆகஸ்ட் 04, 2021

கொவிட் -19 நோயாளிகளின் பயன்பாட்டிற்கென இரண்டு ஒக்ஸிஜன் தெரபி உபகரணங்கள் தெல்தெனிய ஆதார வைத்தியசாலை மற்றும் பேராதனை போதனா வைத்தியசாலை ஆகியவற்றிற்கு இலங்கை விமானப்படை கையளித்துள்ளது.

ஒக்ஸிஜென் தெரபி உபகரணங்கள் இரண்டும் இன்றைய தினம்  (ஆகஸ்ட் 4) விமானப்படை தலைமையகத்தில் வைத்து சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்.நிஹால் வீரசூரிய, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவிடம் இருந்து குறித்த  உபகரணங்களை ஏற்றுக்கொண்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க பொது பொறியியல் பிரிவு,  இரத்மலானை மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பிரிவுடன் இணைந்து இந்த உபகரணங்களை தயாரித்ததாக விமானப்படை மேலும் தெரிவித்துள்ளது.