--> -->

கற்பிட்டியில் 820 கிலோ கிராம் கடல் அட்டைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

ஆகஸ்ட் 05, 2021

கற்பிட்டி, கீரிமுந்தலம் கடற்கரை பகுதியில்  மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது 16 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 820 கிலோ கிராம் கடலட்டையுடன் சந்தேகநபர்கள் ஏழு பேர்  கடற் படையினரால் கைது செய்யப்பட்டனர். குறித்த சந்தேக நபர்கள்  பயன்படுத்திய இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் கடல் அட்டைகளை கொண்டு செல்வதற்காக கடற்கரையில் லெறி ஒன்றுடன் காத்திருந்த மேலும் மூன்று சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது,

இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் கற்பிட்டி பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 26 தொடக்கம் 44 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் அனைவரும் கடல் அட்டை, படகுகள் மற்றும் லொறி சகிதம்  மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, சுகாதார வழி முறைகளுக்கு அமைய இடம்பெற்றதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.