--> -->

கடலோர பாதுகாப்பு படையினரால் 5300 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டது

ஆகஸ்ட் 09, 2021

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 5372 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள், சிலாபம் பகுதியில் வைத்து கைமாற்றப்படும் வேளையில் கடலோர பாதுகாப்பு படையின் சுரக்ஷா கப்பலின் படைவீரர்களினால் கைப்பற்றப்பட்டது.

கடலோர பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இவ்வாறு உலர்ந்த மஞ்சள் நிற நிரப்பப்பட்ட 143 சாக்கு பொதிகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு ஒன்றுடன் ஐந்து இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டதாக கடலோர பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

இதன்போது கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சள் மேலதிக சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடலோர பாதுகாப்பு படை மேலும் தெரிவித்துள்ளது.

கொவிட் பரவல் நிலைமை காரணமாக கைது செய்யப்பட்ட ஐந்து இந்திய பிரஜைகளும் படகுடன் அவர்களது தாயகம் நோக்கி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நடவடிக்கைகள், சுகாதார வழிகாட்டுதல்களுக்கமைய முன்னெடுக்கப்பட்டதாக கடலோர பாதுகாப்பு படை உறுதிப்படுத்தியுள்ளது.