--> -->

370 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் கைது

ஆகஸ்ட் 18, 2021

கற்பிட்டி கிளித்தீவு பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 370 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் நேற்று (ஓகஸ்ட்,17) கைது செய்யப்பட்டார்.

கடற்படையின் வடக்கு வடமேல் பிராந்திய கடற்படை கட்டளையைகத்தினால் கற்பிட்டி கடனீரேரி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்துக்கிடமாக 10 சாக்கு பைகளில் பொதி செய்யப்பட்டிருந்த உலர்ந்த மஞ்சளினை படகு ஒன்றில் இருந்து வள்ளத்திற்கு மாற்றும் வேலையில் இப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சள் படகு, வள்ளமும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கடற்படையினரால் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்

குறித்த சந்தேக நபர் கற்பிட்டிமுகத்துவாரம் பகுதியில் வசிக்கும் 49 வயது உடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கின்னப்பாடு, சுங்க திணைக்களம் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட உள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த தேடுதல் நடவடிக்கை கொவிட்-19 பரவலைத் தடுக்கும் சுகாதார வழி முறைகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.