--> -->

இலங்கை பாதுகாப்பு படையினருக்கு சீன மக்கள் குடியரசினால் 300,000 சினோபார்ம் தடுப்பூசிகள்

ஆகஸ்ட் 26, 2021

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் இலங்கைக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் (ஓய்வு) விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க இலங்கை பாதுகாப்பு படையினருக்காக சீன மக்கள் குடியரசின் தேசிய பாதுகாப்பு அமைச்சினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ள மூன்று இலட்சம் சினபார்ம் தடுப்பூசிகள் சனிக்கிழமை (28, ஓகஸ்ட்) இலங்கையை வந்தடையவுள்ளது.

சீன பாதுகாப்பு அமைச்சரின் விஜயத்தின்போது இரு நாட்டு உயர் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலின்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் பெரும் பங்கு வகிப்பது தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியிருந்தார். இதற்கமையவே இந்தத் தடுப்பூசிகள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, இந்தத் தடுப்பூசிகள் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள், போரின் போது உயிர் தியாகம் செய்த படை வீரர்களின் மனைவிமார்கள், படை வீரர்களின் கீழ் தங்கி வாழ்வோர் மற்றும் ஓய்வுபெற்ற முப்படை வீரர்களுக்கும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளன.

சீன மக்கள் குடியரசினால் இலங்கை பாதுகாப்பு படையினருக்கு இராணுவ ஒத்துழைப்பின் கீழ் வழங்கப்படவுள்ள மேற்படி ஒரு தொகுதி சினோபார்ம் தடுப்பூசிகள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் எதிர்வரும் சனிக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளது.

இவ்வாறு நாட்டை வந்தடையும் தடுப்பூசி தொகுதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கை பாதுகாப்பு செயலாளரிடம் சீன தூதரக அதிகாரிகளினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.