--> -->

41 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

ஆகஸ்ட் 26, 2021

பருத்தித்துறை, மணல்காடு கடற்பரப்பில் இன்று (ஓகஸ்ட்,26) கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின்போது சுமார் 139.930 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது இரு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், கடத்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட படகொன்றும் கடற் படையினரால் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவின் சந்தைப் பெறுமதி சுமார் 41 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு கடல் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது கடற்படையினர் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற சந்தேகத்திற்கிடமான படகினை கைப்பற்றினர்.

கைதுசெய்யப்பட சந்தேக நபர்கள் பருத்தித்துறையில் வசிக்கும் 22 மற்றும் 26 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள், கேரளா கஞ்சா மற்றும் படகு ஆகியவற்றுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கொவிட்-19 தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க நடைமுறையில் உள்ள சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.