2020 டோக்கியோ பராஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியில் இராணுவத்தின் தினேஷ் பிரியந்த உலக சாதனை

ஆகஸ்ட் 30, 2021

இலங்கை இராணுவத்தின் சார்ஜென்ட் தினேஷ் பிரியந்த ஹேரத், 2020 ஆம் ஆண்டு டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியில் 67.79 மீட்டர் தூரத்தை எறிந்து உலக சாதனை படைத்தார்.

கஜாபா ரெஜிமெண்டைச் சேர்ந்த சார்ஜென்ட் ஹேரத் 2008ல் புலிகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போது கிளிநொச்சியில் வைத்து காயமடைந்தார், பின்னர் அவர் பரா தடகளப் போட்டிகளில் தீவிரமாக பங்கேற்றதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இராணுவ பரா தடகள போட்டியில் (52 மீ) ஈட்டி எறிதலில் (52 மீ) தங்கப் பதக்கம் வென்றதாகவும், 2012-ல் மலேசியாவின் பரா தடகள போட்டியில் 52.95 மீற்றர் தூரம் வீசி முதல் இடத்தையும், 2017ல் ஜெர்மனியின் பரா தடகள போட்டியில் 53.09 மீற்றர் தூரம் வீசி (தகுதி)  இரண்டாம் இடத்தையும் மற்றும் 2017-ல் லண்டன் பரா தடகள போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் 59.90  மீற்றர் தூரம் வீசி இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டதாக இ ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.