--> -->

ஐநா நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அமெரிக்க அரசு வெடிபொருள் செயலிழப்பு உபகரணங்கள் நன்கொடை

செப்டம்பர் 03, 2021

ஐ.நாவின் மாலி அமைதி காக்கும் பணிகளில் ஈடுப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தின் போர்கள போக்குவரத்து குழுவிற்கான வெடிப்பொருள் செயலிழக்கும் கருவிகளை நல்லெண்ண அடிப்படையில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை இராணுவத்திடம் நன்கொடையாக வழங்கியது.

பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா சார்பாக இந்த நன்கொடையினை இராணுவத்தின் தலைமை களப் பொறியியலாளரும், இலங்கை பொறியியலளர் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர மற்றும் இலங்கை பொறியாளர் படையணியின் 14 வது இரசாயனவியல் உயிரியல் கதிரியக்க மற்றும் அனு படையணியின் கட்டளை அதிகாரியும் ஏற்றுக்கொண்டனர். பிரதம பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரும் பாதுகாப்பு பாதுகாப்பு ஒருங்கிணைப்பு நிபுணருமான கொமன்டர் ரோஸ் பீட்டர்ஸ் தலைமையிலான அமெரிக்க தூதரகத்தின் திரு கபில திஸாநாயக்க உள்ளிட்ட தூதுக்குழு பாதுகாப்பு மத்தேகொடை இலங்கை பொறியியலாளர் படையணி தலைமையகத்திற்கு சென்ற இந்த நன்கொடையினை வழங்கியிருந்தனர்.

நன்கொடையாக வழங்கப்பட்ட உபகரணங்களில் தொலைவிலிருந்து இயக்க்க்கூடிய வாகனங்கள் (ROV) 2 மற்றும் வெடிகுண்டு அகற்றும் உபகரணங்கள் (BD Suits) 06 என்பன காணப்பட்டன. சிறிலங்கா இராணுவத்தின் தலைமை களப் பொறியியலாளரும், இலங்கை பொறியியலளர் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர இந்த நல்லெண்ண நடவடிக்கைக்கு அமெரிக்க அரசாங்கத்திற்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்திற்கும் இராணுவத்தின் நன்றியைத் தெரிவித்தார்.

இந்த நன்கொடையினை ஏற்பாடு செய்த பாதுகாப்பு இணைப்பாளர் லெப்டினன்ட் கேணல் டிராவிஸ் காக்ஸுக்கும் நன்றி கூறினார். இந்த வெடிப்பொருள் செயலிழக்கும் கருவிகள் இத்துறையில் உள்ள இயக்குனர்களின் திறன்கள், நம்பிக்கை, நம்பகத்தன்மை மற்றும் திறனை நிச்சயம் மேம்படுத்தும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார். அமெரிக்க தூதுக்குழுவின் தலைவர் கொமாண்டர் ரோஸ் பீட்டர்ஸ், பாதுகாப்பு ஒத்துழைப்புகளில் அமெரிக்க தூதரகம் எதிர்காலத்திலும் இலங்கை இராணுவத்திற்கு உதவ ஆவலாக இருப்பதாக தெரிவித்தார்.

உபயம் - www.army.lk