கடற்படை தலைமையிலான கூட்டு நடவடிக்கையில் ரூ. 3,100 மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் மீன்பிடி படகு கைப்பற்றப்பட்டது

செப்டம்பர் 04, 2021
  • கூட்டு நடவடிக்கையின் வெற்றிக்கு ஜனாதிபதி பாராட்டு - பாதுகாப்பு செயலாளர்

கொழும்பு துறைமுகத்திற்கு ஜனாதிபதியின் பிரதிநியாக வருகை தந்த பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு),  இலங்கையின் தென் பிராந்தியத்திற்கு  அப்பால் உள்ள சர்வதேச கடற்பரப்பில் வைத்து சுமார் ரூ.3,100 மில்லியன் ரூபா பெறுமதியான 336 கிலோகிராம் ஹெராேயின் போதைப்பொருளை கொண்டு வந்த வெளிநாட்டு மீன்பிடி படகினை இன்றைய தினம் (செப், 04)  கைப்பற்றிய இலங்கை கடற்படை, பொலிஸ் மற்றும் புலனாய்வு சேவைகளுக்கு ஜனாதிபதி  பாராட்டுக்களை தெரிவித்ததாக  குறிப்பிட்டார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, ஹெரோயின் போதைப்பொருளை கொண்டு சென்ற மீன்பிடி படகு,  கடற்படையின்  சமுத்திரா கப்பலினால்  கைப்பற்றப்பட்டது.

போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புக்கெதிராக போராட உந்துசக்தியாக திகழும் ஜெனரல் குணரத்ன, ,  போதைப்பொருட்களின் வருகையை இலங்கையின் தெற்கிலிருந்து சுமார் 740 கடல் மைல் தூரத்தில் உள்ள சர்வதேச கடற்பரப்பில் வைத்து முடக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட அயராத அர்ப்பணிப்புக்காக அந்தந்த சட்ட அமலாக்க மற்றும் புலனாய்வு அமைப்புக்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

இதன்போது, ஊடகங்களுக்குப் பதிலளித்த பாதுகாப்புச் செயலாளர், “ஆகஸ்ட் 12 முதல் இந்த போதைப்பொருளைப் பிடிக்கத் திட்டமிடப்பட்டதாகவும் கடல் சீற்றம் இருந்தபோதிலும் கடற்படையின் சமுத்ரா கப்பல் பயணம் செய்து திட்டத்தை கச்சிதமாக நிறைவு செய்ததாக குறிப்பிட்டார்.

மேலும், இந்த கூட்டு நடவடிக்கையின் சாதனையை விளக்கிய அவர், "இதே அமைப்பில் நாம் கூட்டாக முன்னோக்கிச் சென்றால், எதிர்காலத்தில் இந் நாடு சட்டவிரோத போதைப்பொருட்களிலிருந்து விடுபடுவதைக் காண முடியும்" எனக் கூறினார்.

கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட படகு மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்'

இந்த அனைத்து நடவடிக்கைகளும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இடம்பெற்றது.  

இதன் போது  கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, சிரேஷ்ட கடற்படை, பொலிஸ் மற்றும் போதைப்பொருள் பணியக அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.