--> -->

கடலோர பாதுகாப்பு படைவீரர்களுக்கு தீர்ப்பாயம் தொடர்பான பயிற்சிகள்

செப்டம்பர் 07, 2021

அண்மையில் மிரிஸ்ஸாவில் உள்ள உயர் பயிற்சி மையத்தில், போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் தடுப்பு திட்ட அதிகாரிகளினால், இலங்கை கடலோர பாதுகாப்புபடை வீரர்களுக்கு ‘தீர்ப்பாயம் தொடர்பாக பயிற்சி’ அளிக்கப்பட்டன.

தீர்ப்பாயம் தொடர்பான பயிற்சி நான்கு பாட தொகுதிகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு பாடத் தொகுதியும் இரண்டு நாள் அமர்வுகளாக இடம்பெற்றது. இந்த அமர்வுகளில் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றும் பிரசித்திபெற்ற வெளிநாட்டு பயிற்றுவிப்பாளரான ஆண்ட்ரூ பென்னட் கலந்துகொண்டு விரிவுரையளித்ததாக கடலோர பாதுகாப்பு படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பயிற்சி தொகுதிகள், பலவிதமான உருவகப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளின் போது கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்தி தீர்ப்பு திறன்களை மேம்படுத்தும் வகையில் கடலோர பாதுகாப்பு படையின் 32 வீரர்கள் பயிற்சி பெற்றதாக கடலோர பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

இந்த பாடநெறியில் பங்கேற்ற படைவீரர்கள் சிக்கலான வேலை சூழலில் சட்டபூர்வமான, விரைவான, பயனுள்ள, துல்லியமான நடவடிக்கை மேற்கொள்ளவும் மற்றும் முடிவெடுப்பதை மேம்படுத்தவும் இங்கு அனிமேஷன் காட்சிகள் மற்றும் உருவகப்படுத்தப்பட்ட சூழ்நிலை காட்சிகள் என்பன பயிற்சிக்காக வழங்கப்பட்டன.

இந்த பயிற்சியின் மூலம் பெறப்பட்ட அறிவு மற்றும் நடைமுறை அனுபவம் என்பன பங்கேற்பாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் அமைந்திருந்ததாக கடலோர பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

இந்த பயிற்சி நிகழ்வினை மேற்பார்வையிட ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய கடல்சார் குற்றத்தடுப்பு திட்டத்தின் தலைவர் அலன் கோல் மற்றும் உலகளாவிய கடல்சார் குற்றத்தடுப்பு திட்ட பிரிவின் இலங்கையின் உயர்மட்ட பிரதிநிதிகள் ஆகியோர் கடலோர பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு வருகை தந்திருந்தனர்.