--> -->

தொற்றுநோய் நிலைமைகள் தொடர்ந்தாலும், நாம் நாட்டின்
அபிவிருத்தி இலக்குகளை அடைய வேண்டும் - பாதுகாப்பு செயலாளர்

செப்டம்பர் 09, 2021
  • தேசிய பாதுகாப்பின் ஸ்திரத்தன்மையிலேயே அபிவிருத்தி தங்கியுள்ளது

தொற்றுநோய் நிலைமைகள் தொடர்கின்ற போதிலும் தேசத்தினை நெருக்கடி நிலைக்குள்ளாக்காமல், தேசிய பாதுகாப்பை உறுதி செய்து, அபிவிருத்தி இலக்குகளுடன் கூடிய ஸ்திரதன்மை அடைய நாம் எப்போதும் பணியாற்ற வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) இன்று (செப்டம்பர்,09) தெரிவித்தார்.

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நாட்டில் புரையோடி காணப்பட்ட மிலேச்சத்தனமான பயங்கரவாதம் தொடர்பாக குறிப்பிட்ட அவர், எம்மால் அத்தைகய பயங்கரவாத அச்சுறுத்தலிலிருந்து நாட்டை விடுவிக்க முடிந்தாலும், தொற்றுநோய் வடிவத்தில் மற்றொரு பாதுகாப்பு அச்சுறுத்தலைக் எதிர்கொண்டுள்ளோம். இன்று முழு உலகிற்கும் இது பாரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என்றார்.

ஜெனரல் சேர் ஜாேன் கொத்தலாவால பாதுகாப்பு பல்கலைக்கழகத்தினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட 14வது சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டின் அங்குரார்பன நிகழ்வில் கலந்துகொண்டு உறையாற்றும் போதே பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாகவும் சிறப்பு பேச்சாளராகவும் அதிமேதகு ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க  கலந்து கொண்டார்.

ஜெனரல் சேர் ஜாேன் கொத்தலாவால பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் இவ்வருட சர்வதேச ஆராய்ச்சி மாநாடு 'தற்போதைய சூழ்நிலையில் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய அபிவிருத்தி' எனும் தொனிப்பொருளில் இடம்பெறுகின்றது. நாட்டில் நிலவும் தொற்றுநோய் நிலைமைகளின் காரணமாக இம்முறை இந்த ஆராய்ச்சி மாநாடு இணைய தொழில்நுட்பம் மூலமாக இடம்பெறுகின்றது.  

இந்த மாநாட்டில் உரை நிகழ்த்திய பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மேலும் குறிப்பிடுகையில் :-
கொவிட் - 19 தொற்றுநோய் இதுவரைக்கும் நிறைவடையாத நிலையில் வாழும் நாம், இந்த புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப எமது பணிகளை மாற்றியமைக்கும் வழிகள் மற்றும் வழிமுறைகளை புரிந்துகொண்டு செயற்படுவது மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

இலங்கையர்கள் என்ற வகையில் இந்த கடினமான சூழ்நிலையில் எமது நடவடிக்கைகள் தேசிய அபிவிருத்தி இலக்குகளை நோக்கி வழிநடத்துவதற்கான வழிகளையும் வழிமுறைகளையும் தேடுவதாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

அபிவிருத்தி என்பது தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் ஸ்திரதன்மை அடையவதே எனக் கூறினார்.

அண்மைய தசாப்தங்களில் உலகமயமாக்கல் மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர், "ஒரு நாட்டின் அபிவிருத்தி மற்றும் தேசிய பாதுகாப்புக்கு இடையேயான உறவு பெரும்பாலும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது" என்றார்.

அபிவிருத்தி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பானது, இலங்கை அரசிற்கு தேசிய அபிவிருத்தி ஒரு முக்கியமான மூலோபாய முன்னுரிமையாக உருவெடுத்துள்ளது என்றார்.

அரசாங்கத்தின் பொருளாதார இலக்குகள் மற்றும் குறிக்கோள்களை அடைவதற்கு சாத்தியமான அனைத்து வழிமுறைகளும், மனித பாதுகாப்பை உறுதி செய்யும் போது பல தடைகளை எதிர்கொண்டு "ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்கள் பாதிக்கப்படும்போது, ​​அந்த நாடு விரும்பிய இலக்கை அடைவது மிகவும் கடினம். "இந்த விடயத்தில் இலங்கை மாத்திரம் விதிவிலக்கு அல்ல" என அவர் விவரித்தார்.

இலங்கை அபிவிருத்தி அடைந்து வரும் ஒரு நாடு என்ற வகையில் நீண்ட காலத்திற்கு தற்போதுள்ளவாறே பொருளாதார நிலைமையினை எடுத்துச் செல்வது கடினமான ஒன்று என்பதை குறிப்பிட்ட பாதுகாப்புச் செயலாளர், "பொருளாதார ஆதாயங்களை விரைவுபடுத்தும் எந்தவொரு திட்டதினாலும் மனித உயிர்கள் இழக்கப்படக்கூடாது" என்றும் கூறினார். "பொருளாதாரத் துறையில் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்காக கிடைக்கக்கூடிய அனைத்து சாத்தியக்கூறுகளையும் கண்டறியும் விடயத்தில் ஜனாதிபதி தனது முழு கவணத்தையும் ஈர்த்துள்ளதாக குறிப்பிட்டார்.

வன்முறை தீவிரவாதம், பயங்கரவாதம், கடற்கொள்ளை, போதைப்பொருள் கடத்தல்,ஆட்கடத்தல், ஏனைய கடத்தல் நடவடிக்கைகள், இணைய குற்றச்செயல்கள் மற்றும் ஏனைய திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் என்பன ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைகின்றன. இயற்கை பேரழிவுகள் போன்ற பிற சமகால பாதுகாப்பு விடயங்களாநாம் மறந்துவிடக் கூடாது எனவும் நினைவு கூர்ந்தார்.

நாட்டின் பூகோள முக்கியத்துவம் தொடர்பாக விளக்கிய அவர், இதனாலேயே அச்சுறுத்தல்களுக்கு ஆளாக வேண்டியுள்ளதாகவும் எவ்வாறெனினும் தற்போது இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் 'இலங்கை கடற்படை மேற்கொள்ளப்பட்டுள்ள 'அதிகபட்ச பாதுகாப்பு கூறுகளை கொண்ட சிறைச்சாலை' மற்றும் கடல்சார் பாதுகாப்பு திட்டங்கள் என்பன மிகவும் பயனுள்ளதாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார்.

"இருப்பினும், இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளின் விளைவுகள் நம் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு மிதமான அளவிலான அச்சுறுத்தலைக் கொண்டுள்ளன" என அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் கொத்தலாவலை பாதுகப்பு பல்கலைக்கழகத்தின் இந்த சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ஜெனரல் குணரத்ன, "ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மையைக் கெடுக்கும் இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஒரு அரசாங்கத்தால் மட்டும் முடியாது", "எனவே, பொறுப்பான நாட்டு பிரஜை என்ற வகையில் நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்தி அடைவதில் கருத்தில் கொள்ள வேண்டிய பரிந்துரைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பா யோசனைகளை முன்வைப்பது நமது கடமை என அவர் சுட்டிக்காட்டினார்.

கொத்தலாவலை பல்கலைக்கழக சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் வரவேற்புரை இப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிசினால் நிகழ்த்தப்பட்டது.

இந்த நிகழ்வில், வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே, கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக வேந்தர் ஜெனரல் ஜெரார்ட் ஹெக்டர் டி சில்வா (ஓய்வு), பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, தேசிய பாதுகாப்பு கற்கைள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ரொஹான் குணரத்ன, விமானப்படையின் பிரதம அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பாயோ, ஏனைய பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் மற்றும் உபவேந்தர்கள், பிரதி உபவேந்தர்கள், பீடாதிபதிகள் மற்றும் பணிப்பாளர்கள், முன்னாள் வேந்தர்கள், முன்னாள் உப வேந்தர்கள் மற்றும் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கட்டளை அதிகாரி, கல்வியலாளர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு அதிதிகள் மற்றும் சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் ஆகியோர் இணையம் மூலமாக கலந்து கொண்டனர்.