எருக்கலம்பிட்டியில் 72,000ற்கும் மேற்பட்ட கடலட்டைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

செப்டம்பர் 13, 2021

கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது எருக்கலம்பிட்டி பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 72,542 கடலட்டைகள் நேற்றைய தினம் (செப்டம்பர்,12) கைப்பற்றப்பட்டது.

இலங்கை கடற்படையின் வட மத்திய கடற்படை பிராந்தியத்தின் கீழ் உள்ள கஜபா கடற்படை முகாம் கடற்படை வீரர்களினால் முன்னெடுக்கப்பட்ட இந்த தேடுதல் நடவடிக்கையின் போது சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களும் ஒரு வாகனமும் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் சாவகச்சேரி மற்றும் மன்னார் பிரதேசங்களில் வசிக்கும் 20 மற்றும் 46 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்டுள்ள வாகனம் மற்றும் கடல் அட்டைகள் சகிதம் சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற் தொழில் திணைக்கள உதவி பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.