--> -->

கிராமப்புற மக்களின் நலனுக்காக கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட 874வது குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

ஒக்டோபர் 10, 2021

இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கருவலகஸ்வெவ, ரஜவிகம பிரதேசத்தில் ஸ்தாபிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நேற்றைய தினம் (ஒக்டோபர் 09) பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

ரஜவிகம ஸ்ரீ சம்புத்த கலபிடகல விஹாரையில் இடம்பெற்ற திறப்பு விழாவின்போது கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சந்திமா உலுகேதென்ன ஆகியோர் கலந்துகொண்டு குடிநீர்சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்கள் பாவனைக்காக கையளித்தனர்.

நாட்பட்ட சிறுநீரக நோய்களைத் தடுப்பதற்கான தேசியத் திட்டத்தின் பங்களிப்புடன் நாட்டின் பல பகுதிகளில், சுகாதார அமைச்சுடன் இணைந்து கடற்படையின் ஆளணி மற்றும் நிபுணத்துவத்தின் மூலம் நாடு முழுவதும் 874 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை கடற்படை நிறுவியுள்ளது.

ரஜவிகம பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கடற்படையின் சேவா வனிதா பிரிவின் நிதி உதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் ஊர்வாசிகள் மற்றும் இப்பிராந்தியத்தில் வசிப்போர் மாத்திரமன்றி இந்த விஹாரைக்கு வருகை தரும் பக்தர்களும் தூய சுத்தமான குடிநீரை பெற்றுக் கொள்ளக் கூடியதாக அமையும் என கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

சுகாதார வழிகாட்டுதலுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில், வட மத்திய மாகாணத்தின் துணை தலைமை சங்கநாயகர், மத்யமா நுவரகம் பலதே சசனரக்ஷக மண்டலயவின் துணைப் பதிவாளர் மற்றும் ஸ்ரீ சம்புத்த கலபிடகல விஹாரையன் தலைமை நிர்வாகி வண. பன்வில குணரதன நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், வடமேற்கு கடற்படை பிராந்திய கட்டளைக்தளபதி ரியர் அட்மிரல் ஜெயந்த குலரத்னே, சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் மற்றும் கிராமவாசிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.