--> -->

தேவையுடைய குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் மூன்று புதிய வீடுகள் நிர்மாணிப்பு

ஒக்டோபர் 17, 2021

இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக நன்கொடையாளர்களின் நிதி உதவியுடன் மேலும் இரண்டு புதிய வீடுகள் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்படட்டு தேவையுடைய குடும்பங்களுக்கு கையளிக்கப்பட்டன.

இதற்கமைய, வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் உள்ள 11வது கெமுனு வோட்ச் படைவீரர்களினால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு, நெடுங்கேணி மருதோடை திருமதி பி விஜேந்திரனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கி வைக்கப்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், கண்டி, 'டுவெல்ஸ்' வைத்தியர்கள் நலன்புரி சங்கத்தின் தலைவர் திரு நலிந்த திஸாநாயக்க, வெஹெரதென்ன மெட்டல் குரூஷர்ஸ் பிரைவேட் லிமிடெட் உரிமையாளர் திரு. திலீப் ஜெயக்கொடி, கெப்டன் லக்ஷ்மன் (ஓய்வு), திரு ரஞ்சுல மற்றும் 11 வது கெமுனு வோட்ச் படை வீரர்கள் ஆகியோரும் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இந்திட்டத்திற்கு நிதிப்பங்களிப்பு வழங்கியதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள  4 கெமுனு வாேட்ச் படையினரால் நிர்மாணிக்கப்பட்ட மற்றொரு வீடு, உன்னிச்சை சிப்பிமடுவில் உள்ள திரு. எம்என்எஸ்டீ குமார நந்தசேனவுக்கு கையளிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பு இருதய அறுவை சிகிச்சை நிபுணர் விஷேட வைத்தியர் முதித்த லான்சகாரவினால் அளிக்கப்பட்டது.

மிகவும் எளிமையான முறையில் நடைபெற்ற புதுமனை குடி புகுவிழாவில் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் நன்கொடையாளர்கள் மற்றும் பிராந்திய அரச அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.