--> -->

இலங்கை கடற்படை கப்பல் 'சமுத்ரா' எச்எம்எஸ் 'கென்ட்' கப்பலுடன் கூட்டுப்பயிற்சியில் பங்கேற்பு

ஒக்டோபர் 25, 2021

எரிபொருள் நிரப்பும் தேவைகளுக்காக கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்திருந்த ரோயல் கடற்படை படைக்குச் சொந்தமான வகை 23 ரக ஹேர் மெஜஸ்டிஸ் 'கென்ட்' போர்க்கப்பல், இலங்கை கடற்படையினருடன் இணைந்து மேற்கொண்ட பயிற்சிகளின் பின்னர் நேற்றைய தினம் (ஒக்டோபர் 24) கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.

குறித்த கப்பல் இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் இலங்கை கடற்படைக்கு சொந்தமான சமுத்ரா கடற்படை கப்பலுடன் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

அத்துடன் ஹெச்எம்எஸ் 'கென்ட்' கப்பலின் கட்டளைத் தளபதி மேத்யூ சைக்ஸ், இலங்கை கடற்படை பிரதி பிரதம அதிகாரியும் மேற்கு கடற்படை கட்டளையகத்தின் கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் உபுல் டி சில்வாவை சந்தித்து கலந்துரையாடியதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.