--> -->

இராணுவத்தினரால் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு தொகை சேதன பசளையின் இருப்பு 'லக் பொஹொர'விடம்

ஒக்டோபர் 27, 2021

அரசாங்கத்தின் தேனப்பசளை உற்பத்திக்கு வலுவூட்டும் வகையில், இலங்கை இராணுவத்தின் கிழக்கு-பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் இந்த ஆண்டுக்கான பெரும் போகத்திற்கு தேவையான 86, 961 கிலோ சேதனப் பசலையை உற்பத்தி செய்து வரையறுக்கப்பட்ட சிலோன் உரக் கம்பணி நிறுவனத்திடம் நேற்று (ஒக்டோபர், 26) கையளித்தது.

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரியவினால் வெலிகந்தை, கிழக்கு-பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் வைத்து வரையறுக்கப்பட்ட சிலோன் உரக் கம்பணி நிறுவனத்தின் முகாமையாளர் திரு. ஆர். ஏ. பி. பெரேராவிடம் வழங்கி வைத்ததாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு-பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள படைவீரர்கள் தங்களது விவசாய நிபுணத்துவத்துடன் விவசாய அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய இந்த சேதன பசளை உற்பத்திச் செயல்பாட்டில் பங்களிப்பு வழங்கியதாக இராணுவ தெரிவித்துள்ளது.

சுகாதார வழிகாட்டுதல்களுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், வரையறுக்கப்பட்ட சிலோன் உரக் கம்பணி நிறுவனத்தின் கிழக்கு மாகாண மற்றும் பொலன்னறுவை மாவட்ட பிராந்திய முகாமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.