வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவத்தினராலும் நிவாரண நடவடிக்கைகள்

நவம்பர் 09, 2021

நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை இராணுவத்தினர் வழங்கி வருகின்றனர். இதற்கமைய அவர்கள், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தல், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறுபட்ட மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இன்று (நவம்பர் 9) அதிகாலை 8வது சிங்கப் படைப்பிரி பின் படையினர் அடைமழை காரணமாக ரம்புக்கன தொம்பேமட பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வீட்டினுள் சிக்கியிருந்த 4 குடும்ப உறுப்பினர்களை மீட்டு ரம்புக்கனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தின் தந்தை படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறித்த குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் இரண்டு மகள்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும், இப்பகுதியில் மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள படைவீரர்கள் அந்த இடத்தைச் சுத்தம் செய்வதிலும், தங்களுடைய மதிப்புமிக்க பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பதற்காக மீட்கும் முயற்சியிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, மஹாகலுபஹன மலைத்தொடரில் மண்சரிவு எச்சரிக்கையை அடுத்து 12 இலங்கை பொறியியலாளர படையினர், 11 குடும்பங்களைச் சேர்ந்த 42 பேரை உடனடியாக விஜேசுந்தராராமய வளாகத்திற்கு இன்று பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில். 1வது தேசிய பாதுகாப்பு படைவீரர்கள் பொல்கஹவெல கொடவெல பிரதேசத்தில் இருந்து 50 க்கும் மேற்பட்ட குடும்பங்களை மீட்டு அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்.

இராணுவத்தின் 58வது படைப்பிரிவு மற்றும் 143வது படைப்பிரிவு படைவீரர்கள் உடனடியாக புத்தளம் நெடுங்குளம் குளத்தைச் சுற்றியுள்ள பாதிக்கப்படக்கூடிய இடங்களில் மணல் மூட்டைகளை அடுக்கி அதன் கரையைப் பலப்படுத்தத் தொடங்கியுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிக பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள குறித்த பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்த்தும் பணிகளை 612வது படைப்பிரிவின் தளபதி த மேற்பார்வையிட்டு வருவதாகவும், மக்களின் சொத்துக்கள் மற்றும் பெறுமதியான பொருட்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக படையினர் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலையால் ஏற்படக்கூடிய எந்த ஒரு விளைவுக்கும் முகம் கொடுக்கும் வகையில் இராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.